Latestஉலகம்

இரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால்  கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே ? 

இங்கிலாந்து, ஆகஸ்ட் 23  – ரயிலில்  அமர மற்ற பயணிகள் இடம் கொடுக்காததால் தாய் ஒருவர் தன் பிள்ளைக்கு அழுக்கான  தரையில் அமர்ந்து தாய்ப்பால் கொடுத்தத்  துயரம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் கடந்த செவ்வாய் கிழமை ஸ்ரோப்ஷைரிலிருந்து லூட்லோவிற்கு செல்லும் ரயிலில் நடந்துள்ளது.

சம்பவத்தின் போது சோஃபி மோலின்ஸ் (22 வயது) தன் கணவர் ரோப் மூரே மற்றும் ஒரு வயது மகன்  செஸ்டர் மூரேவுடன் அந்த ரயிலில் பயணித்துள்ளார். இந்நிலையில், அதிகமானோர் அங்கு இருந்ததால் அவர்களுக்கு அமர இடம் கிடைக்கவில்லை.

எனினும் , ஒருவர் கூட மனிதாபிமானம்  அடிப்படையில் அந்த தாய்க்கு  அமர இடம் வழங்கவில்லை.

இதற்கிடையே 30 நிமிடங்கள் அவர்கள் நின்று கொண்டே பயணித்த நிலையில்,  சோஃபி  அந்த அழுக்கான  தரையில் அமர்ந்து தன் பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்  பரவி வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker