Latestமலேசியா

கற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்

ஈப்போ, ஆக, 23 – இந்தோனேசிய பணிப்பெண் கற்பழிப்பு வழக்கில் ஆதாரம் இருப்பதால், பேரா ஆட்சிக் குழு உறுப்பினர் பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டுமென மந்திரி பெசார் அகமட் ஃபைசால் அசுமு கேட்டுக் கொண்டார்.

அந்த வழக்கு முடியும் மட்டும் பவுல் யோங் தமது அரசாங்க பொறுப்பிலிருந்து அகல வேண்டுமென்றும், முடிவெடுக்கப்படும் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளக் கூடாது எனவும் அகமட் ஃபைசால் கேட்டுக் கொண்டார்.

ஆட்சிக் குழு உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் திறம்பட சேவையை ஆற்றி, அனைவருக்கும் ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளார்.

சட்ட விதிப்படி அவர் விடுப்பும் எடுத்துக் கொள்வது நல்லது என அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பவுல் யோங் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 376இன் கீழ் கற்பழிப்பு எனும் குற்றம் இன்று சுமத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படியும் தரப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker