Latestஉலகம்

காதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது  !

சிங்கப்பூர், ஆகஸ்ட் 23 – காதலியை கொன்று  எரித்ததாக   குற்றச்சாட்டப்பட்ட ஆடவருக்கு ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்டது.  இச்சம்பவம் சிங்கப்பூரில் கடந்த 2016ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது

லெஸ்லி  கூ  க்வீ ஹோக் (51) என்பவர் தன் காதலியான சூய் யாஜி (31 வயது)   கழுத்தை நெறித்து கொன்றப் பின், அவரது உடலை மூன்று நாட்களாக வைத்து எரித்துள்ளார்.

அப்பெண் கொடுத்த  20 000  டாலரை (RM60,354)  மீண்டும் கேட்கையில் ஆத்திரமடைந்த ஆந்த ஆடவன் காதலியைக் கொன்றுள்ளான் என கூறப்பட்டது.

கடந்த  2016 ஆண்டு   ஜூன் 29 -இல்    ஏற்கனவே திருமணமான லெஸ்லி  யாஜியை ஆள் நடமாட்டமில்லா இடத்திற்கு அழைத்து சென்று கழுத்தை நெறித்து  கொன்றதாகவும் பின் மூன்று நாட்களுக்கு எரித்து தடயங்களை அழித்ததாகவும்  நீதிமன்ற அறிக்கையில் பதிவாகி இருந்தது.

இருப்பினும் அச்சடலத்தில் காணப்பட்ட தலைமுடி, ஆடை துண்டுகள் போன்ற ஆதாரங்களால் தற்போது லெஸ்லிதான் குற்றவாளி என்று  நிரூபிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker