Latestமலேசியா

கார் விபத்தில் எரிந்து கருகியோர் – அடையாளம் காணப்படவில்லை

குவாந்தான், ஆக. 23 – பெக்கான், திரியாங்கில் திங்கட்கிழமை கார் ஒன்று தீப்பிடித்ததில், எரிந்து கருகிய 3 பேரின் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

அந்த மூவரின் சடலங்களைக் கோர யாரும் முன்வராததால் போலீசார் அதில் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

பிரேத பரிசோதனையில் அவர்களின் கைரேகையை எடுக்க முடியவில்லை என பகாங் போக்குவரத்து புலானாய்வு அமலாக்க இலாகா தலைவர் கமாருல்ஸமான் ஜூசொ தெரிவித்தார்.

எரிந்தவர்களில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையும் அடங்கும் என நம்பப்படுகிறது.

திங்கட்கிழமை காலை 6.15 மணியளவில் அந்த எரிந்து போன உடல்கள் புரோட்டோன் வீரா காரில் கிடந்தன. அந்தக் கார் ஜாலான் தெமெர்லோ- பாஹாவ் சாலையின் 43ஆவது கிலோ மிட்டரில் திரியாங், பெக்கான் மெங்குவாங்கில் பெட்ரோல் நிலையத்துகு அருகில் லோரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.

தடம் மாறிய கார், எதிர் திசையில் வந்த மிட்சுபிசி லோரியில் மோதிய பின்னர், பின்னால் வந்த ஹைகோம் லோரியின் மீது மோதியதாகத் தெரிகிறது.

மூன்று சடலங்களும் தெமர்லோ, சுல்தான் ஹாஜி அகமட் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

கார் எஞ்சின் பதிவு எண்ணை வைத்து பரிசோதித்ததில், அது BEG 7068 என்ற எண் பட்டையைக் கொண்டிருப்பதாகவும் அது சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker