Latestமலேசியா

சவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு

கோலாலம்பூர், ஆக. 23 – சவூதி நிதியமைச்சும் இளவரசர் ஒருவரும் 642 மில்லியன் ரிங்கிட்டை நஜிப் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலனாய்வு அதிகாரி நீதிமன்ற்த்தில் தெரிவித்தார்.

ஃபைசால் துர்கி என்பவரும் சவூதி அரேபிய நிதி அமைச்சும் நஜிப்பின் 694 எனும் முடியும் வங்கிக் கணக்கில் பணத்தைச் சேர்த்ததாக எம்ஏசிசியின் மூத்த துணை ஆணையர் ரோஸ்லி ஹுசேய்ன்(வயது 54) என்பர் தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.

நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் வழக்கின் 56ஆவது நாளில் ரோஸ்லி அதனைத் தெரிவித்தார்.

இளவரசர் ஃபைசால் பின் துர்கி 399 மில்லியன் ரிங்கிட்டையும் சவூதி அரேபிய நிதியமைச்சு 243 மில்லியன் ரிங்கிட்டையும் நஜிப்பின் வங்கிக் கணக்கில் செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

1எம்டிபி வழக்கை தமது சக அதிகாரியான ஐடா என்பவர் நடத்தியதாகவும், அவரின் முழு பெயரை தமக்கு ஞாபகமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker