Latestமலேசியா

டுரியான் தோள் – அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு 

பந்திங், ஆகஸ்ட் 23 –  பொது இடத்தில் பொறுப்பற்ற முறையில் டுரியான் தோள்களை வீசியதற்காகவும் அனுமதியின்றி  ‘போஸ்டர்களை’ ஒட்டிய குற்றத்திற்காகவும்  அறுவரை    கோலா லங்காட் மாநில  ஊராட்சி மன்ற ஊழியர்கள்  கையும் களவுமாக கைது செய்து தெலோக் டத்தொக் பந்திங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

மாநில ஊராட்சி மன்ற தலைவர் மொகமட்  ஸேன் A . ஹமீட் குறிப்பிடுகையில்   துணை சட்டம் 4 , எம்.டி.கே.எல் மாசுபாடு, அகற்றல் சட்டம்  மற்றும் குப்பைகள்  அகற்றல் சட்டங்கள் 2007யை மீறுவோரின் மீது   கடுமையான நடவடிக்கைள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

இதற்கிடையே ,  ஆகஸ்ட் 15 -ஆம்  திகதி இதே போன்ற   வழக்கு விசாரணையில், இரு  நபர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு RM1,500 அல்லது ஐந்து நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.

இந்நிலையில், பலர் இது போன்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இதையே பொது மக்கள் படிப்பினையாக கொண்டு விதிகளை மீறாமல்  இருத்தல் அவசியம்  என அவர் வலியுறுத்தினார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker