Latestமலேசியா

டோங் ஸோங் தலைவர்கள்: விசாரிக்கப்பட்டனர்

கோலாலம்பூர், ஆக. 23 – ஒருங்கிணைந்த சீனப் பள்ளி செயற்குழுக் கழகத்தின் (டோங் ஸோங்) முக்கிய இரு தலைவர்கள் புக்கிட் அமான் போலீசாரால் விசாரிக்கப்பட்டனர்.

அவர்கள் ஜாவி-அரேபிய சித்திர எழுத்தை தாய்மொழிப் பள்ளிகளில் போதிப்பதை எதிர்த்ததற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகார்களை அடுத்த அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.

அந்த இயக்கத்தின் தலைவர் தான் தாய் கிம், செயலாளர் இங் சாய் ஹெங் ஆகியோர் நேற்று காலை 9.30 மணியளவில் புக்கிட் அமான் வந்து, பிற்பகல் 12.45க்கு வெளியேறினர்.

அவர்கள் வேண்டுமென்றே நிந்தித்தது, அமைதிக்குப் பங்கம் விளைவித்தது போன்ற குற்றங்களை புரிந்ததாக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 504இன் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.

துன் மகாதீர் அடிக்கடி டோங் ஸோங்கை கடுமையாக விமர்சித்து, அது இன ரீதியானது என்றும் சீன இனத்திற்காக மட்டுமே பாடுபட்டு வரவதாகக் குறிப்பிட்டு வந்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker