Latestமலேசியா

தமிழ் நேசன் முன்னாள் பணியாளர்கள்- இழப்பீடு கோரி மகஜர்

கோலாலம்பூர், ஆக. 23 -நாட்டின் மூத்த பத்திரிகையான தமிழ் நேசன் நாளிதழின் முன்னாள் பணியாளர்கள் இழப்பீடு கோரி இன்று, அதன் வாரிய உறுப்பினர் டத்தோஶ்ரீ சா. வேள்பாரியிடம் மகஜர் ஒன்றினை வழங்கினர்.

இன்று காலை 11 மணியளவில் தமிழ் நேசனின் முன்னாள் பணியாளர்கள் 40 பேர் புக்கிட் டாமான்சாராவில் உள்ள இ & சி கட்டடத்தில் உள்ள வேள்பாரியின் அலுவலகத்துக்கு முன்னாள் கூடி வேள்பாரிக்காகத் காத்திருந்தனர்.

அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால் அவரின் செயலாளரிடம் மகஜர் ஒப்படைக்கப்பட்டது.

மகஜர் வழங்குவதை வேள்பாரியிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட தாகவும், அவர் அதனை பெற்றுக் கொள்ளாமல் ஓடி ஓளிந்து கொண்டாரா எனும் கேள்வி எழுப்பப்பட்டது.

நிதிப் பிரச்சினையால் தமிழ்நேசன் தனது வெளியீட்டை ஜனவரி 31ஆம் தேதியோடு முடித்துக் கொண்டது. மார்ச் வரை சம்பளம் கொடுக்கப்படும் என ஒவ்வொரு தொழிலாளிக்கும் கடித வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதச் சம்பம்
வழங்கப்பட்டது. ஆனால், மார்ச் மாதச் சம்பளம் இது வரை வழங்கப்படவில்லை.

தமிழ் நேசன் நிர்வாகம் தொழிலாளர்களைச் சந்தித்து அதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை. மேலும், 25லிருந்து 30 ஆண்டுகள் வரை அந்நிறுவனத்தில் வேலை செய்தோருக்குச் சட்டப்படியான இழப்பீடும் தரப்படவில்லை.

இது சம்பந்தமாக மனிதவள அமைச்சு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இன்று வழங்கப்பட்ட மகஜரை வேள்பாரி நேரடியாக வாங்கிக் கொள்ள வராததால், அடுத்த வாரமும் இது போன்ற மகஜர் வழங்கப்படும் என்றும் நிர்வாகத்திடமிருந்து நல்ல பதில் கிடைக்கும் வரை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

95 ஆண்டு கால பாரம்பரிய பத்திரிகையான தழிழ் நேசன், இதுவரை உண்மையாக உழைத்த ஊழியர்களின் அர்ப்பணிப்பை உதாசீனம் செய்து அவர்களுக்குச் சேர வேண்டிய இழப்பீட்டையும் மார்ச் மாத சம்பளத்தையும் வழங்காமல் இருப்பது அதன் உரிமையாளரான துன் சாமிவேலு குடும்பத்தாருக்கு பெரும் இழுக்காகும்.

எனவே, முன்னாள் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான சட்டப்படியான இழப்பீட்டை வழங்க வேள்பாரி அக்கறை காட்ட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker