Latestமலேசியா

தேசியக் கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம்; காணொளிகளை பரவ வேண்டாம் – MCMC

பகாங் மாநில பள்ளி ஒன்றில் தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிடப்பட்ட புகைப்படங்களையோ அல்லது காணொளிகளையோ பொதுமக்கள் யாரும் பகிரவோ  பரப்பவோ கூடாது என மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான காணொளி வெளியானதை தொடர்ந்து, இதே போன்ற பழைய சம்பவங்களின் காணொளிகளையும் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.

நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையில் அந்த படங்களும் காணொளிகளும் சில மாற்றியமைக்கப்பட்டுள்ளதை MCMC மறுக்கவில்லை. அதே சமயத்தில், இணையத்தை பயன்படுத்துவோர், வெறுப்புணர்சியை தூண்டும் வகையிலான கருத்துகளையோ தகவலையோ பதிவிட வேண்டாம் என மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே, தெலுக் ஆயேர் தாவாரில் தன் தந்தையின் வீட்டின் முன்புறத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தலைகீழான தேசியக் கொடி சம்பவம் தொடர்பாக விசாரிக்க 61 வயது பெண் ஒருவரை இன்று செபராங் பிறை போலீசார் காவல் நிலையத்திற்கு  அழைக்கப்பட்டுள்ளார். விசாரனையில் தன் 89 வயது முன்னாள் போலிஸ் அதிகாரியான தந்தைக்கு அந்த தேசியக் கொடியை தொங்கவிட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உதவியதாக அப்பெண்மணி கூறியுள்ளார்.
போலீசார் இச்சம்பவத்தை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker