Latestமலேசியா

தேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது

ஜொகூர், ஆக.23 – தொடக்கப் பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கான 2019-ஆம் ஆண்டு தேசிய அளவிலான செந்தமிழ் விழா கடந்த 21 ஆகஸ்டு தேதி  துன் உசீன் ஓன் ஆசிரியர் பயிற்சி கழகம் பத்து பகாட்டில் நடைபெற்றது.

ஜொகூர் மாநில ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக நடைபெறும் இச்செந்தமிழ் விழாவில் இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
அவற்றுள்  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக கவிதை புனைதல், கட்டுரை எழுதுதல் மற்றும் பேச்சுப் போட்டியும், தேசிய பள்ளி மாணவர்களுக்காக குழுப்பாடலும், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக கவிதை புனைதல், பேச்சுப்போட்டி மற்றும் சிறுகதை எழுதுதலும், படிவம் ஆறு மாணவர்களுக்காக மேடை பேச்சுப் போட்டியும், கட்டுரை எழுதுதலும் நடைபெற்றன.

இப்போட்டியில் ஜொகூர், பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.


இப்போட்டியின் நிறைவு விழாவிற்கு மலேசிய கல்வி துணை அமைச்சர் மாண்புமிகு தியோ நி சீங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை எடுத்து வழங்கினார். மேலும் இம்மாதிரியான நிகழ்வுகள் மாணவர்களிடையே இலைமறை காய் போல இருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வது மட்டுமல்லாது தமிழ்மொழியின் மீது மாணவர்களுக்கு ஆழ்ந்த பற்றும் ஏற்படும் என குறிப்பிட்டார்.

இத்தேசிய அளவிலான செந்தமிழ் விழாவின் ஒட்டுமொத்த வெற்றியாளராக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நெகிரி செம்பிலான் மாநிலம் வெற்றி மகுடம் சூடியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker