Latestமலேசியா

நெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்

புத்ரா ஜெயா, ஆக. 23 – நெடுஞ்சாலை நிர்வாகமான பிளஸ் மலேசியா நிறுவனத்தை யார் நடத்தினாலும் டோல் வசூலிப்பு நிறுத்தப்படாது என துன் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

பிளஸ் நிறுவனத்தை நடத்த மாஜு ஹோல்டிங்ஸின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

டோல் கட்டணம் தொடரப்பட வேண்டுமென அந்நிறுவனம் கேட்டுக் கொண்டதாகவும், டோல் கட்டண வசூலிப்பு இல்லையென்றால் அது வருமானத்தைப் பெற முடியாது என குறிப்பிட்டுள்ளது.

அந்த விணணப்பத்தில் டோல் கட்டணம் குறைக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. டோல் வசூலிப்பை நிறுத்தினால், அரசு வேறு வகையில் அதற்கு பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அது கோடிக்கணக்கில் கூடுதல் செலவாகும்.

மேலும், அரசே அதனை நடத்தினாலும், நெடுஞ்சாலைகளை பராமரிக்க வேண்டும், சாலைகளை அகலப்படுத்த வேண்டும். சில சமயங்களில் புதிய தடத்தை உருவாக்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் பணம் தேவைப்படும்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, புதிய கிள்ளான் விரைவுச் சாலை, சிரம்பான் -போர்ட்டிக்சன் நெடுஞ்சாலை, வடக்கு-தெற்கு விரைவுச் சாலை, மலேசியா-சிங்கப்பூர் 2ஆவது சாலை, பட்டர்வொர்த்- கூலிம் விரைவுச் சாலை மற்றும் பினாங்குப் பாலம் முதலியவற்றையும் பிளஸ் நிறுவனம் பராமரித்து வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker