Latestமலேசியா

பணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது

ஈப்போ, ஆக. 23 – இந்தோனேசிய பணிப் பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கற்பழிப்புப் புகாரை அளிக்கச் சொன்னவருக்கு 100,000 ரிங்கிட் தரப்பட்டதாக ஙே கூ ஹாம் தெரிவித்தார்.

இந்தப் புதிய ஆதாரம் ஆகஸ்டு 22இல் வியாழக்கிழமை ஹோட்டல் ஒன்றில் தம்மைச் சந்தித்த நபர் ஒருவர் தெரிவித்ததாகப் பேரா சட்டமன்ற சபாநாயகரான அவர் தெரிவித்தார்.

மற்ற சட்டமன்ற உறுப்பினர்களோடு அந்த நபரை தாம் சந்தித்ததாக ஙே கூ ஹாம் தெரிவித்தார்.

அந்த நபர், தமக்கு 100, 000 ரிங்கிட் தரப்பட்டதாகவும், அந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொல்லப் படுவார் என எச்சரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டதைப் பற்றி போலீசில் புகார் அளித்த பின்னர் ஙே கூ ஹாம் செய்தியாளர்களளிடம் தெரிவித்தார்.

பேரா சட்டமன்ற உறுப்பினர் பவுல் யோங் 23 வயதான இந்தோனேசிய பணிப் பெண்ணை கற்பழித்த குற்றத்தி ற்காக வெள்ளிக்கிழமை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்.

இதனிடையே, போலீஸ் விசாரணைக்கு அந்த நபர் கொண்டு வரப்படுவார் என்றும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் ஙே கூ ஹாம் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker