Latestமலேசியா

“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – இன்று நடந்த ” காடுகளை காப்போம் ” நிகழ்வில் கலந்து கொண்ட  பிரதமர் துன் டாக்டர் மகாதீர் “மெர்பாவ்’ மரத்தை நம் நாட்டின் தேசிய மரமாக அறிவித்துள்ளார்.

அதன் நீடித்த தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து மலேசியர்களும் “மெர்பாவ்” மரத்தை  தேசிய பெருமையின் சின்னமாக  எடுத்துக் கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாக  அவர் கூறினார்.

இதற்கிடையில், மலேசிய பல்லுயிரியலின் நிலையான மேலாண்மை மற்றும் பாதுகாப்பு முயற்சிகளின் விளைவாக, நாட்டின் வனத்தின் ஒருமைப்பாட்டின் அடையாளமாக மெர்பாவ் மரம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும் மெர்பாவ் மரம் நாட்டின் தொழில் மற்றும் பொருளாதாரத்திற்கு வனத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றும்  அடையாளமாகும் எனவும்  கண்காட்சி திறப்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நாளை தொடக்கம் செப்டம்பர் 22 – வரை  நடைபெறும்  இக்கண்காட்சி  காடுகள் பாதுகாப்பு திட்டம்  2019-2020 இன் கீழ் நாட்டின் காடுகளின் செழுமையையும், காடுகளைப் பாதுகாக்க   மேற்கொள்ளப்பட்ட  முயற்சிகளையும் எடுத்து காட்டுகிறது.

இந்நிலையில் , அக்கண்காட்சி மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடு  கண்காட்சியாக அங்கீகாரம் பெற்று  மலேசிய சாதனைப்  புத்தகத்தில் இடப்பெற்றது. 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker