Latestமலேசியா

லோரி – கன்சில் கார் விபத்து; நால்வர் பலி இருவர் கவலைக்கிடம்

சரவாக், ஆக.23 – ஜாலான் ஶ்ரீ அமான் சரிக்கே கிலோ மீட்டர் 52 அருகே, கார் ஒன்று லோரியுடன் மோதியதில், காரில் நால்வர் சம்பவம் இடத்திலேயே பலியாகினர்.
இன்று அதிகாலை 1.52 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் நால்வர் பலியான வேளை இருவர் தலையிலும் கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சரவாக் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தலைவர் அலெக்சன் நாகா தெரிவித்தார்.

ஶ்ரீ அமானிலிருந்து சீபுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த லோரி கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் சென்றத்தில் எதிரில் வந்துக் கொண்டிருந்த காரை மோதியதில், அந்நால்வரும் காரில் சிக்கி மாண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. லோரி ஓட்டுனர் காயமின்றி உயிர் தப்பினார்.

இச்சம்பவம் சாலை போக்குவரத்து சட்டம் 1987 செக்‌ஷன் 41 (1) இன் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகிறது என அலெக்சன் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker