Latestமலேசியா

KLIA தொழில்நுட்ப கோளாறு – இன்னும் தீர்க்கப்படவில்லை

சிப்பாங், ஆக.23 – கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் நேற்று இரவு 10 மணிவரை சுமார் 68 பயணங்கள் தடைப்பட்டன.

கடந்த புதன்கிழமையிலிருந்து ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப பிரச்சனையை மேற்கொள்ள தற்போது பல முயற்சிகளை கையாண்டு வருவதாக மலேசியா விமான நிலையங்களின் நிறுவனம் இன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

பயணிகளின் பயணதடைகளை சீர் செய்வதற்கு அந்நிறுவனம் 4 பேருந்துகள், இலவச கார் நிறுத்துமிடம் என பல சேவைகளை காலை 6 மணிவரை பயணிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும், இந்த பயண தடையினால், உலகளவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டது.  இதனிடையே, தாமதத்தைத் தவிர்க்க, பயணம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்னரே பதிவு செய்து கொள்ள வேண்டுமென மலேசியா விமான நிலையங்களின் நிறுவனம் சமூக வலைத்தளத்தில்  கேட்டுக் கொண்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker