Latestமலேசியா

அம்மாவைப் பார்த்துக்கோ,  தந்தை சொன்ன கடைசி வார்த்தை! 

கூலிம், ஆக. 24 – அம்மாவைப் பார்த்துக் கொள்ளும்படி பிள்ளைகளிடம் கூறிய தந்தை ஒருவர், சாலை விபத்தில் கொல்லப்பட்டார். இத்துயர சம்பவம் இன்று காலை கெடா,  பாடாங் செராயில்  நிகழ்ந்துள்ளது.

காலை 7 .44 மணியளவில் நிகழ்ந்த  சம்பவத்தின்போது முகமட்  தாஹிர் முகமட்  சாலே (வயது 39 ) என்பவர் தமது  மோட்டார் சைக்கிளில் வேலைக்குப் பயணித்த வேளையில் 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பலியானார்.

இது குறித்து , தாஹிரின் மனைவி நோர்லீசா முகமது யூசோப்(வயது 40) குறிப்பிடுகையில், காலை 6 .30 மணியளவில் தன்  மகள்  நூருல் அனிசாவை  (வயது 12 ) பள்ளியில் விட்ட பின் வேலைக்கு செல்கையில்  அந்த விபத்து  நடந்ததாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே, கூலிம் மாவட்ட போலீஸ் அதிகாரி சுப்பரின்டென்டன் முகமட்  யூசோப் ஷாரி குறிப்பிடுகையில், இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள்,   இரு கார்கள் மற்றும்  ஒரு லாரியும் சமந்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

அந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான வேளையில்  ஒருவர் காயமடைந்ததாகவும், மற்ற இருவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியதாகத் தெரிவித்தார்.

இவ்வழக்கு போக்குவரத்துச் சட்டம் 41 / 1  கீழ் விசாரிக்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker