Latestமலேசியா

காட் எதிர்ப்புப் போராட்டம் – இருவர் கைது

கோலாலம்பூர், ஆக. 24 – நேற்று கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் நடத்தப்பட்ட ஜாவி-அரேபிய சித்திர எழுத்து எதிர்ப்புப் போராட்டத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அந்த மறியல் போராட்டத்திகுப் போலீசார் அனுமதி மறுத்திருந்தபோதும், அது நடத்தப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட இருவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது.

அந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும் அந்த மறியல் போராட்டம் அமைதியுடன் நடந்ததாகப் பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் இடைக்காலத் தலைவர் அரிஃபாய் தராவி தெரிவித்தார்.

மாலை 6 மணிக்கு அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வோர் வரத் தொடங்கி, 7 மணிக்கு முக்கிய தலைவர்கள் உரையாற்றத் தொடங்கினர்.

கைது செய்யப்பட்ட ஒருவர் அந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர் என நம்பப்படுகிறது. அதில் கலந்து கொண்ட சுமார் 500 பேர், கூட்டம் தொடங்கிய 15 நிமிடங்களுக்குப் பின்னர் மெல்ல கலையத் தொடங்கியது.

கைது செய்யப்பட்ட இருவரும் அமைதிப் பேரணி சட்டத்தின் வாயிலாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker