Latestமலேசியா

சவூதி பெண்கள்: சுயமாக நடமாட அனுமதி

கோலாலம்பூர், ஆக. 23 – நெடுங்காலமாக பெண்களை அடிமை போல் நடத்தி வந்த சவூதி அரேபியாவின் கடும் கட்டுப்பாடுகள் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு பெண்களுக்கான சம உரிமையை கொடுத்து வரும் அரசுக்குப் பல தரப்பாரும் பாராட்டுகளை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், சவூதிய பெண்கள் வீட்டை விட்டு வெளியேயும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்னர் தகப்பனார், சகோதரர்கள் அல்லது கணவனின் அனுமதி கட்டாயம் பெற வேண்டுமென்ற விதிமுறை தளர்த்தப்பட்ட பின்னர், அங்குள்ள பெண்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இனி அவர்கள் யாரின் அனுமதி, உத்தரவாதமும் இன்றி வெளியில் சென்று வரலாம். மேலும், அங்குள்ள பெண்கள் குழந்தை பிறப்பு, திருமணப் பதிவு, விவாகரத்து பதிவு ஆகியவற்றை தாங்களாகவே செய்ய அனுமதியளிக்கப்படுகிறது.

மற்ற நாடுகளைப் போலவே சவூதி பெண்களும் சலுகையும் உரிமையும் பெற அனுமதிக்க நாட்டின் ஆட்சியாளர் முகமட் பின் சல்மான் நடவடிக்கை எடுத்து வருவது பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

எனினும், இன்னும் பல விஷயங்களிள் மாற்றம் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker