Latestமலேசியா

தேடப்படும் ஆசாமி- போலீசாரால் சுடப்பட்டார்

கோலாலம்பூர், ஆக. 24 – போலீசாரால் தேடப்பட்ட ஆசாமி ஒருவன் ஜாலான் கெந்திங் கிளாங் அடுக்குமாடி வீடொன்றில் சுடப்பட்டார்.

போலீசார் அந்த நபரை சோதனை இட்டபோது அந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ரஜாப் ஆஹாட் இஸ்மாயில் தெரிவித்தார்.

சோதனையிடும் போது, அந்த நபர் திடீரென தமது கைத் துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கிச் சுட்டதாகவும், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக போலீசார் அந்த ஆடவனை சுட்டதாக அவர் தெரிவித்தார்.

சூடுபட்ட அந்த ஆடவன் சிகிச்சைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker