Latestமலேசியா

பயணம் தாமதம் – எட்டிக்கா காப்புறுதி இழப்பீடு

கோலாலம்பூர், ஆக. 24 – கோலாலம்பூர் விமான நிலையங்களில் ஏற்பட்ட மின்சாதன கருவிகளின் பழுதினால் ஏற்பட்ட பயண தாமதத்திற்காக எட்டிக்கா காப்புறுதி நிறுவனம் இழப்பீடு வழங்க முன் வந்துள்ளது.

பயண காப்புறுதி எடுத்திருக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு வேலை நிறுத்தம், பருவகால தாக்கம் மற்றம்
இயந்திரப் பழுது போன்ற காரணங்களுக்காக ஏற்படும் தாமதத்துக்கு இழப்பீடு வழங்குவது இல்லை.

எனினும், இது முக்கிய விஷயமாக எடுத்துக் கொண்ட எட்டிக்கா காப்புறுதி நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி கமாடின் அகமட், மின்னியல் கருவிகளின் பழுதினால் ஏற்பட்ட பயண தாமதத்துக்குள்ளான பயணிகளுக்கு இழப்பீட்டை வழங்க முன் வந்துள்ளார்.

எனவே, பாதிக்கப்பட்ட பயணிகள் அடையாள அட்டை எண், பயண விவரங்கள், விமானத்தினுல் நுழைய் போர்டிங் பாஸ் மற்றும் வங்கிக் கணக்கின் எண் போன்ற விவரங்களை 019-6507931 என்ற என்ணுக்கு வாட்சப் செய்து இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker