Latestமலேசியா

முன்னாள் போலீஸ்காரர், பேரன் – விபத்தில் மரணம்

கிரிக், ஆக. 24 – கிரிக்-ஜெலி சாலையின் 38.8ஆவது கிலோ மீட்டரில் நடந்த சாலை விபத்தில் முன்னாள் போலீஸ்காரரும் அவரது பேரனும் விபத்தில் சிக்கி மரணமடைந்தனர்.

இப்ராஹிம் ஓஸ்மான்(வயது 58) மற்றும் ஃபாரின் ஹாரிஸ் அப்துல்லா(வயது 5) ஆகியோரே கொல்லபட்டவர்களாவர்.

மழை பெய்து கொண்டிருந்த போது, அவர்கள் பயணம் செய்த ஹொண்டா எக்கோர்ட் வழுக்கி எதிர் தடத்திற்குச் சென்று எதிரே வந்த எரிவாயுக் கலன்களை ஏற்றி வந்த லோரியுடன் நேர் மோதியதில், அந்த விபத்து ஏற்பட்டது.

ஃபாரின் காரிலிலுருந்து தூக்கி எறியபட்டு, சாலையில் விழுந்ததாகவும், அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக கிரிக் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் சே இசா தெரிவித்தார்.

பிரேத பரிசோதனைக்காக இருவரின் சடலங்களும் கிரிக் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker