Latestஉலகம்

8 மாதக் குழந்தை துணியால் நெரித்துக் கொலை : தாய் கைது!

லக்னோ, ஆக. 24 – 8 மாத ஆண்  குழந்தையைக் கொன்று கோணிப் பையில் மறைத்து  வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் உத்திர பிரதேசத்தின் லக்னோவில் நிகழ்ந்துள்ளது.

கிரேட்டர் நொய்டா மாவட்ட போலீஸ் அதிகாரி குறிப்பிடுகையில், ஹேமா ( வயது 26 ) என அடையாளம் காணப்பட்ட அப்பெண்,  தன் கணவன் தன் தங்கையோடு கள்ளக் காதல் உறவை வைத்திருந்ததால், ஆத்திரமடைந்து  அக்குழந்தையைத் துணியால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகத் தெரிவித்தார்.

தன் மாமனாரும் கணவரும் அது பற்றிக் கேட்கையில், குழந்தை கட்டிலிலிருந்து தவறி விழுந்து இறந்ததாகப் பொய் சொல்லியிருக்கிறார். போலீசாருக்குப் பயந்த அவர்கள் மூவரும் குழந்தையின் சடலத்தை மறைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இறந்து 10 நாள்களான நிலையில்  அக்குழந்தையின் சடலம் கடந்த புதன்கிழமை போலீஸாரால்   கைப்பற்றப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker