Latestஉலகம்

மத்தியஸ்தம் செய்ய நான் தயார்…! நீங்கள் தயாரா..அதிபர்  டிரம்ப்! 

சென்னை,ஆக.25- வாஷிங்டன் : ‘ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தை, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் உன்னிப்பாக கவனித்து வருகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால், இந்த விவகாரத்தில் உதவுவதற்கு அவர் தயாராக உள்ளார்’ என, அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு – காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதற்கு, அண்டை நாடான, பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ‘இந்த விவகாரத்தில், மத்தியஸ்தம் செய்வதற்கு தயார்’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், ‘இது, இரு தரப்பு பிரச்சனை. மற்ற நாடுகள் தலையீட்டை விரும்ப வில்லை’ என, மத்திய அரசு உறுதிபட கூறிஉள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாக்., பிரதமர், இம்ரான் கானுடன், டிரம்ப் சமீபத்தில் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, ‘இந்தியாவுக்கு எதிராக இம்ரான் கான் விரோதமாக பேசி வருகிறார்’ என, மோடி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, விரோத பேச்சை குறைத்துக் கொள்ளும்படி, இம்ரான் கானிடம், டிரம்ப் வலியுறுத்தினார்.

பிரான்சில், 24 – 26 வரை நடக்கும், ‘ஜி – 7’ மாநாட்டின் போது, பிரதமர் மோடியை, டொனால்டு டிரம்ப் சந்திக்க உள்ளார். அப்போது, இந்தப் பிரச்னை குறித்து பேசப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தை, அதிபர் டொனால்டு டிரம்ப் உன்னிப்பாக கவனித்து வருகிறார். இதனால், இந்த பிராந்தியத்தில் நிலவும் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில், அவர் உறுதியாக உள்ளார்.

அதனால் தான், இந்தப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய அல்லது உதவுவதற்கு தயாராக உள்ளதாக கூறியுள்ளார். இந்திய தரப்பில் இருந்து, இதுவரை எந்த பதிலும் இல்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker