Latestமலேசியா

விளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து

சிங்கப்பூர், ஆக. 25 – சிங்கப்பூர் சாங்கி நிலையத்தில் விளம்பரக் கண்ணாடி விழுந்து 18 மாதக் குழந்தை மரணமடைந்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியிருந்தது.

விமான நிலையத்தில் அர்பன் ரிவிவோ னும் பேஷன் ஸ்டோரில் அந்தச் சம்பவம் ஆகஸ்டு 23ஆம் தேதி, வெள்ளிக் கிழமை நடந்ததாகவும் அக்குழந்தைக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு, சாங்கி மருத்துவமனையில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்தக் குழந்தையின் குடும்பம் சீனாவிலிருந்து சுற்றுப் பயணம் வந்ததாகவும் சனிக்கிழமையன்று குழந்தையின் பிரேதத்தைப் பெற்றுச் சென்றதாக உள்ளூர் நாளேடு குறிப்பிட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த அர்பன் ரிவிவொ பேஷன் ஆடை நிறுவனம் உலகம் முழுமைக்கும் 200க்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker