Latestமலேசியா

ஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – புரட்சி அணி

கோலாலம்பூர், ஆக. 25 – பிரிக்பீல்ட்சில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஸாக்கிர் நாயக்கிருக்கு எதிரான பேரணிக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என புரட்சி அணி அறிவித்துள்ளது.

பிரிக்பீல்ட்சில் சனிக்கிழமை இரவு நடத்தத் திட்டமிடப்பட்டு ரத்து செய்யப்பட்ட ஜாவி-அரேபிய சித்திரப் பாடத்தை எதிர்த்து ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியானது தங்களின் புரட்சி அணியின் ஏற்பாடு என்றும் அதன் ஏற்பாட்டாளர் கே.உமாகாந்தன் தெரிவித்தார்.

எனினும், இன்று, ஞாயிற்றுக்கிழமை ஸாக்கிரை எதிர்த்து பேரணியைத் தாங்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றும் அதனை வேறொரு இயக்கத்தின் ஏற்பாடு ஆகும் என புரட்சி அணியின் ஒருங்கிணைப்பாளர் கே.உமாகாந்தன் தெரிவித்தார்.

காட் அமலாக்கத்துக்கு எதிரான பேரணியானது தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்தை அமல்படுத்துவதை எதிர்ப்பதாகும். அதில் இன, சம, அரசியல் எதிர்ப்பு இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

அதன் அனுமதிக்கான விண்ணப்பம் இரண்டு வாரங்களுக்கு முன்னரே கொடுக்கபட்டிருந்தாலும், அதன் அனுமதி மறுப்பை கடைசி நிமிடத்தில் தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்களுக்குத் தெரிவிக்க நேரம் போதவில்லை.

10 நிமிட இடைவெளியில் தாமும், சீனக் கழகங்களின் சார்பில் கலந்து கொண்ட டான் பூன் தாக்கும் கூட்டத்தினரிடையே பேரணியை ரத்து செய்ததை அறிவிக்கும்போது தங்களைப் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, அதில் பேசிய வழக்கறிஞர் தினேஸ், பேரணி அமைதியாக நடந்ததாகக் குறிப்பிட்டார்.

உமாகாந்தன் மற்றும் டான் பூன் தாக்கிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அவர்கள் இரவு 1 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் இருவர் மீதும், அமைதிப் பேரணிச் சட்டம் பிரிவு 9(1)இன் கீழ குற்றம் சாட்டப்படும் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் மஸ்லான் லாஸிம் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker