Latestஉலகம்

-திருமணமான அடுத்த நிமிடம் புதுமணத் தம்பதி உயிரிழந்த பரிதாபம்

டெக்சாஸ்,ஆக.26 ,புதுமண தம்பதி இருவரும் நீதிமன்றத்தின் வெளியே நின்ற  காரில் ஏறி புறப்பட தயாராக இருந்தனர் அப்போது எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் பலமுறை உருண்டது இந்த விபத்தில் திருமணம் செய்து கொண்ட புதிய ஜோடி பெற்றோர் கண்முன்னே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் ஹார்லி மோர்கன் வயது 19 இவர் தோழி பவுட்ரியாகஸ் வயது 20. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர் .
 

இந்நிலையில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அங்கு உள்ள ஆராஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதி முன் திருமணம் செய்து கொண்டனர் .பின்னர் புதுமண தம்பதி இருவரும் நீதிமன்றத்தின் வெளியே நின்ற காரில் ஏறி புறப்பட தயாராக இருந்தனர் .

அப்போது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த கார் மீது பயங்கரமாக மோதியது அதில் கார் பலமுறை உருண்டது. இந்த விபத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பெற்றோர் கண்முன்னே உயிரிழந்தனர். இவ்விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இருவரும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில நிமிடங்களில் திருமண தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker