Latestமலேசியா

கல்விக் கழகத்தில் ஆர்ப்பாட்டம் – 7 மாணவர்கள் தடுத்து வைப்பு

பெட்டாலிங் ஜெயா, ஆக. 27 – தனியார் கல்விக் கழகம் ஒன்றின் இரு மாணவர்களை நீக்கியதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய ஒரு சமூக ஆர்வலர் மற்றும் 7 மாணவர்களைப் போலீசார் தடுத்து வைத்தனர்.

ஆரா டாமான்சாரா, பூசாட் டகாங்கான் ஜாலான் பிஜேயு 1ஏ/41பி எனும் இடத்தில் உள்ள அல்லாயிட் ஏரோனோட்டிக் டிரெய்னிங் சென்டர்  தனியார் கல்விக் கழகத்தில் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகச் செய்தி கிடைத்ததாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி கூ மஷ்ரிஜான் கு மஹ்மூட் தெரிவித்தார்.

90 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாகவவும் அந்தப் ஆர்ப்பாட்டத்தை பிஎஸ்எம் கட்சி முன்னின்று நடத்தியதாக நம்பப்படுகிறது.

இரு மாணவர்கள் தங்களது கல்விக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதால் அதிலிருந்து நிறுத்தப்பட்டது, மாணவர் சங்கத்தை அந்தக் கல்விக் கழகம் அங்கீகரிக்கத் தவறியதை எதிர்த்தும் அந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் பிஎஸ்எம்மின் உறுப்பினர் ஷரன் ராஜும் அடங்குவார். அவர்கள் அனைவரும் கிளானா ஜெயா போலீஸ் நிலையத்துக் கொண்டு செல்லப்பட்டு வாக்குமுலம் பெறப்பட்ட பின்னர், இரவு 9.45 மணியளவில் விடுவிக்கப்பட்டதாக பிஎஸ்எம்மின் செயலவை உறுப்பினர் எஸ்.அருள்செல்வம் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker