Latestவாழ்க்கை

சப்பாத்திக்கு தொட்டு கொள்ள உப்பு: இது நல்லா இருக்கே!

லக்னோ,ஆக.27-குழந்தை பிள்ளைகள் தானே ஏமாற்றி விடலாம் என சமயோசிதமாய் மேற்கொண்ட சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுத்தது தொடர்பாக, உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் சியூர் அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவின்போது சப்பாத்தியும் அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் வழங்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவியது. இதுதொடர்பாக மாநில அரசு 2 ஆசிரியைகளை பணி இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்த தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், தலைமை செயலாளர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker