Latestமலேசியா

நஜிப்பின் மகளிடம் ரிம. 10.3 மில்லியன் வருமான வரி- ஐஆர்பி கோருகிறது

கோலாலம்பூர், ஆக. 27 – முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் புதல்வி நூர்யானா விடமிருந்து வருமான வரியாக 10.3 மில்லியன் ரிங்கிட்டை வருமான வரி வாரியம் கோருகிறது.

2011லிருந்து 2017 வரைகுமான மேற்கண்ட தொகையை அவர் செலுத்த வேண்டுமென வாரியம் ஜூலை 24ஆம் தேதி ஷா ஆலம் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தது.

நூர்யானா 2011லிருந்து 2017ஆம் ஆண்டு வரைக்குமான வருமான வரியை விண்ணப்ப பாரத்தில் குறிப்பிடவில்லை என சொல்லப்படுகிறது. நினைவுக் கடிதம் அனுப்பி, 30 நாள்களுக்குள் அதனை அனுப்பத் தவறியது குற்றம் என அது குறிப்பிட்டுள்ளது.

எனவே அவர் 10 மில்லியனே 3 லட்சத்து 92 ஆயிரத்து 36 காசை அவர் செலுத்த வேண்டுமென அது கோரியுள்ளது. இந்த வழக்கின் மேலாண்மை செப்டம்பர் 12இல் செவிமடுக்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker