Latestமலேசியா

பையில் பெண்ணின் இறந்த உடல்

ஷா ஆலம், ஆக. 27 – கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் பெண்ணின் உடல் பையில் வைத்து பெர்சியாரான் கோல சிலாங்கூர் செக்‌ஷன் 7இல் வீசப்பட்ட சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

அந்தப் பெண்ணுக்கு 20லிருந்து 30 வயதாக இருக்கும் என்றும் அங்கு காலை 5.30 மணியளவில் தொலைபேசி ஊழியர்கள் நிலத்தடி தொலைத் தொடர்பு மின்னிணைப்பைச் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது சடலத்தைக் கண்டதாக ஷா ஆலம் போலீஸ் தலைவர் பாஹாருடின் மாட் தைப் தெரிவித்தார்.

அந்தச் சடலம் சாலைக்கு 2.7 மீட்டர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை போலீசார் மீட்டபோது, அந்தப் பெண் 43க்கு 60 சென்டி மீட்டர் அகலம் கொண்ட பையில் திணிக்கப்பட்டிருந்தது. பெண் இறந்து மூன்று நாள்கள் ஆகியிருக்கும் என கணிக்கப்படுகிறது.

சடலத்தில் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லை. பிரேத பரிசோதனைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker