Latestஉலகம்

விமான நிலையத்தில் திருடு:- அதிபர் டிராம்பின் மாஜி பார்ட்னர் கைது!

வாஷிங்டன்,ஆக.28 -விமான நிலையங்களில் மற்றவர்களின் உடைமைகளை திருடி வந்த ஓட்டல்களின் அதிபரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் பங்குதாரரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தினேஷ் சால்வா கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள மெம்பசி அனைத்துலக விமான நிலையத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு நபர் வந்தார். விமான பயணிகளின் உடமைகளை கொண்டுவரப்படும் கன்வேயர் பெல்ட் அருகே சென்றார்.

அதிலிருந்து ஒரு பெரிய சூட்கேசை எடுத்து வெளியில் வந்து அதை தன் காரில் வைத்துக் கொண்டு மீண்டும் விமான நிலையத்துக்கு வந்தார். தான் செல்லவிருந்த விமானத்தில் பயணிக்க சென்றார். அது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

இதற்கிடையில் பயணியர் ஒருவர் தனது உடமையை காணவில்லை என புகார் செய்தார். இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த போது இந்த சம்பவம் வெளியே தெரிந்தது. இதையடுத்து அந்த நபரின் காரில் சோதனை நடத்தியபோது திருடப்பட்ட சூட்கேசுடன் முன்னர் திருடிய சூட்கேஸின் சில பாகங்களும் கிடைத்தன. இரண்டு நாட்கள் கழித்து அவர் திரும்பி வந்தார். அப்போது அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது அவர் பெயர் தினேஷ் சால்வா இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரும் இவரது சகோதரர் சுரேஷ் சால்வாவும் இணைந்து அமெரிக்காவின்
டெல்டா பகுதியில் பல ஓட்டல்கள் நடத்தி வருகின்றனர். கிளிவ் லேண்டில் நட்சத்திர ஓட்டல் ஒன்றும் கட்டி வருகின்றனர் .

மேலும் சகோதரர்கள் இருவரும் அமெரிக்க அதிபர் குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வரை பங்குதாரர்களாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பயணியர் உடைமையை திருடியதை ஒப்புக் கொண்ட தினேஷ் சால்வா இது போல பல  ஆண்டுகளாக திருடிவருவதையும் ஒப்புக்கொண்டார்.தான் செய்வது தவறு என்று
தெரிந்தும் அதை சிலுப்பூட்டும் அனுபவத்திற்கும் உற்சாகத்திற்கும்
செய்வதாக தெரிவித்தார். போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker