Latestவாழ்க்கை

பாடி பிச்சை எடுத்த ரனு மண்டல்:- இன்று ஒலி அலையில் கலக்குகிறார்!

கொல்கத்தா,ஆக.29- நேரம் சரியாக இருந்தால் கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பர். அந்த பழமொழி ரனு மண்டல் விஷயத்தில் உண்மையாகிப்போனது.

திறமை இருந்து.. அதிர்ஷ்டம் இருந்தால் தான் சினிமா துறையில் வாய்ப்புகளே கிடைக்கும். அப்படி கொல்கத்தாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பாடி பிச்சை எடுத்து வந்த ரனு மண்டல் என்ற பெண்னின் வீடியோ பெரிய அளவில் வைரலானது.

அவரது குரலை கேட்டு பலரும் மெய்சிலிர்த்த நிலையில், அவரை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடவைத்துள்ளனர். அதன் பிறகு இசையமைப்பார் ஹிமேஷ் ரேஷ்மையா அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பையும் கொடுத்துள்ளார்.

இதற்கு பாராட்டு குவிந்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் ருபாய் 55 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை ரனு மண்டலுக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker