Latestமலேசியா

21 ஆண்டுகளுக்குப் பின்னர் – மீண்டும் மினி பஸ் சேவை

கோலாலம்பூர், ஆக. 29 – 21 ஆண்டுகளுக்கு முன்னர் கோலாலம்பூரில் பயன்படுத்தப் பட்ட மினி பஸ் சேவை மீண்டும் அடுத்த மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்தச் சேவையை ரேப்பிட் கேஎல் நடத்தும் என்றும் அது முதலில் புக்கிட் இண்டாவிலிருந்து அம்பாங் போய்ன்ட் வரை ஜாலான் ரஸ்மி வழியாகப் பரீட்சார்த்தமாக செப்டம்பர் 1லிருந்து நவம்பர் 29 வரை செயல்படுத்தப்படும். அதற்கு பொதுமக்களிடையே ஆதரவு இருக்குமானால், அது மேலும் தொடரும்.

ஒரு முறைக்கு 31 பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் அது, பயணிகள் அதிகமாக இருக்கும் நேரத்தில் 15 நிமிடத்துக்கு ஒன்றும், நெரிசல் இல்லாத நேரங்களிள் 25 நிமிடத்துக்கு ஒன்றுமாக காலை 5.30லிருந்து இரவு 11.40 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

1975ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மினி பஸ் சேவை தலைநகரில் பேருந்து சேவையை ஒருங்கிணைக்கும் வகையில் 1998இல் அது முடிவுக்குக் கொண்டு வரப் பட்டது. .

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker