Latestமலேசியா

இதற்காகவா நான் பாடுபட்டேன் – லீ சோங் வேய் 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 30 – மலேசியர்கள் அனைவரும் நாளை தேசிய தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் பலரும் சின்ன சின்ன விஷயங்களுக்காக மன இன பேதத்தோடு பேசுவது வருத்தமளிப்பதாக முன்னாள் தேசிய பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வேய் தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

இது நான் பாடுபட்ட மலேசியா அல்ல. காட் எழுத்துக் கல்வி போன்ற விவகாரங்களுக்காக யாரோ ஒருவரின் குரலுக்கு கட்டுப்பட்டு மலேசியர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம். நல்லிணக்க உணர்வில்லாத எவராக இருந்தாலும் அவரின் செயல்பாடு நாட்டின் நிலைத்தன்மையைப் பாதிக்கும் எனின் அவர்களை நம்மோடு நெருங்க விடாதீர்கள். அது மலாய், சீன மற்றும் இந்தியர்களாக இருந்தாலும் சரி. தீய எண்ணம் கொண்ட இவர்கள் நம் நாட்டையும் நம் மக்களையும் கவிழ்க்க விடக்கூடாது.

இந்த விவகாரங்களைவிட மலேசியர்கள் பெரியவர்கள். நாம் வலிமையானவர்கள் எனக் காட்டுங்கள் என லீ சோங் வேய் கூறியுள்ளார்.

2006ஆம் ஆண்டில் சீனாவின் லின் டானுடன் நான் மோதவிருந்த சமயத்தில் எனக்கு ஆதரவு அளித்த மலேசியர்கள் பற்றி நினைவுக் கூர்ந்தார் லீ சோங் வேய்.

லின் டானும் மிஸ்புன் சிடேக்கும் மோதினால் மலேசிய சீனர்கள் லின் டானுக்குத்தான் ஆதரவு தருவார்கள் என ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருவர் கூறியிருந்தார். அதைக் கூற யார் அவர்?
மேலும், இந்த இரு விளையாட்டாளர்களையும் நன்கு தெரியும் என்ற முறையில் என் ஆதரவு மிஸ்புன் சீடேக்குத்தான். மிஸ்புன் என் நாட்டவர். அவர் வெற்றிப் பெற்றால் என் நாடு பெருமைப்படும், மக்களும் பெருமைப்படுவார்கள். ஆனால் லின் டான் வெற்றிப் பெற்றால் எனக்கு என்ன கிடைக்கும்? என கருத்து பதிவிட்டுள்ளார் லீ சோங் வேய்.

அவர் தனது பதிவில் யார் அந்த நபர் என பெயரிடாவிட்டாலும், அவர் சமய போதகர் ரிடுவான் தீ அப்துல்லாவைத்தான் குறிப்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ல், மலேசிய சீனர்கள் மலேசியாவை நேசிப்பது போல பாசாங்கு செய்ய வேண்டாம் என ரிடுவான் கூறியிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker