Latestமலேசியா

துருக்கியரை சொந்த நாட்டுக்கு அனுப்பியதில்- மலேசியாவின் இரட்டை வேடம்

கோலாலம்பூர், ஆக. 31 – துருக்கி நாட்டு ஆசிரியரை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பிய செயலானது அந்த விவகாரத்தில் மலேசியா இரட்டை வேடம் போடுவதாக வழக்கறிஞர் அண்ட்ரூ கூ குற்றம் சாட்டினார்.

அரிஃப் கோமிஸ் ஐநாவின் அகதிக்கான பாதுகாப்புடன் மலேசியால் தமது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். அவர் அங்குள்ள பயங்கரவாதக் கும்பலான பெத்துலான கூலனுடன் இணைந்து அந்நாட்டு அதிபரைக் கவிழ்க்க சதி செய்ததன் பேரில், அவர் அந்நாட்டு போலீஸ்காரர்களால் இங்கு கைது செய்யப்பட்டு, அந்நாட்டுக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதில் மலேசியா இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சாட்டிய அண்ட்ரூ கூ, இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான ஸாக்கிர் நாயக்கை அந்நாட்டுக்கு அனுப்பினால், அவருக்கு முறையான நீதி கிடைக்காது என்றும் கொல்லப்படும் சாத்தியம் இருப்பதாக பிரதமர் துன் மகாதீர் கூறி வருகிறார். ஸாக்கிர் குற்றம் புரிந்த ஆதாரம் இருந்ததனால்தான் இந்தியா அவரை நாடு கடத்த வேண்டுமென கோருகிறது.

துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டதாக நம்பப்பட்ட ஆயிரக் கணக்கான அரசு அதிகாரிகள் சிறையில் அடைக்கபட்டுள்ளனர். சிறைகளில் கடுமையான, கடுமையான சித்திரவதை நடப்பதாகச் செய்திகள் வருகின்றன. மேலும், அங்கு குற்றவாளிகளுக்கு நோர்மையான நீதி கிடைக்குமா என உலக நாடுகள் சந்தேகம் கொள்வதாக அண்ட்ரூ கூ சுட்டிக்காட்டினார்.

அதற்கு மறுப்பு தெரிவிக்கும் மகாதீர், துருக்கி ஆசிரியர் அரிஃப் கோமிஸை திடுதிப்பென, எந்தவொரு கேள்வியும் இல்லாமல் அந்நாட்டுக்கு அனுப்பியது தவறாகும் என அண்ட்ரூ கூ தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker