Latestமலேசியா

என்னைப் பற்றி சினிமா படமா? அதில் உண்மையைச் சொல்ல வேண்டும்- துன் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா, செப். 2 – என்னைப் பற்றி சினிமா படம் எடுத்தால், அதில் உண்மையாணா விஷயங்களைச் சொல்ல வேண்டுமென துன் மகாதீர் கேட்டுக் கொண்டார்.

தம்மைப் பற்றி படம் எடுக்க நினைப்போர் தமது நல்ல மற்றும் கெட்ட நடவடிக்கைகளைச் சொல்ல வேண்டுமெனவும், அதில் தம்மைப் புகழ்ந்தோ அல்லது வானளாவப் விமர்சித்தோ ஆராதிக்க வேண்டாமென மலேசியா ஏர்லைன்ஸின் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

அதே பேட்டியில், தேசிய விமானச் சேவையானது அரசினால் மட்டுமே நிர்வகிக்கத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய விமானச் சேவை இருக்க வேண்டுமென்ற எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இப்போது பல விமான நிறுவனங்கள் உருவாகி இருக்கின்றன. அதில் ஒன்று தேசிய நிறுவனமாக இயங்கலாம். அது நாட்டின் சின்னத்தைக் கொண்டு செல்வதில் தவறில்லை.

கடந்த ஜூலையில் மலேசிய ஏர்லைன்சை நடத்த நான்கு நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்

ஸ்கைடிரேக்ஸ் வருடாந்திர தர நிர்ணயத்தில் 100 நிறுவனங்களில் மலேசிய ஏர்லைன்ஸ் 38ஆவது இடத்தில் தள்ளப்பட்டுள்ளது. 2014இல் அது 20 இடத்தில் இருந்தது. 2015இல் 24ஆவது இடத்துக்கும் 2016இல் 34ஆவது இடத்திலும் 2017இல் 31 இடத்திலும் வந்துள்ளது.

2014இல் எம்எச்370 விமானம் இந்தியப் பெருங்கடலில் காணாமல் போனது, எம் எச்17 நிறுவனம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு திரும்பும் வேளையில் உக்ரேய்ன் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர், மலேசிய ஏர்லைன்ஸ் கடும் நிதிப் பிரச்சினையில் சிக்கி மீள முடியாமல் இருந்து வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker