Latestமலேசியா

குடிநுழைவு அதிகாரிகள் தாக்கப்பட்டனர்- சீன பிரஜைகளின் அராஜகம்

புத்ரா ஜெயா, செப். 3 – கோலாலம்பூர் இரண்டாவது விமான நிலையத்தில் இரு குடிநுழைவு அதிகாரிகள் சீனப் பிரஜைகளினால் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.

ஆகஸ்டு 31ஆம் தேதி அவர்களை நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், இந்தச் சம்பவம் நேர்ந்தது.

அன்றைய தினம் காலை 12.30 மணியளவில் குடிநுழைவுத் துறை அதிகாரிகளான முகமட் ஃபிர்டாவுஸ் மற்றும் முகமட் சலான் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

அனுமதி மறுக்குப்பட்ட அந்த இரு சீன நாட்டுப் பிரஜைகள் 33 வயது பெண்ணுடன் வளாகத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தபோது, அவர்களை ஆண்கள் பகுதிக்குப் செல்லுமாறு போகும்படி கேட்டுக் கொண்டதை அடுத்து. சீன நாட்டு பிரஜைகள் ஃபிர்டாவுஸை கீழே தள்ளி, நெஞ்சில் குத்தியதோடு சாஹ்லானையும் தாக்கினர்.

ஃபிர்டாவுசும் சாஹ்லானும் சிறிய காயத்துக்கு உள்ளானதாகக் குடிநுழைவுத் தலைமை இயக்குநர் கைருல் ஸைமி டாவுட் தெரிவித்தார்.

அவர்களின் பயணம் போலியாக இருப்பதால் அந்த 3 பேரும் 1959/1963ஆம் ஆண்டு குடிநுழைவுத் துறை சட்டத்திற்கிணங்க நாட்டில் நுழையத் தடை விதிக்கப்பட்டதால், ஆத்திரமுற்று அடாவடித் தனத்தைக் காட்டியுள்ளனர்.

அது சம்பந்தமாகப் போலீஸ் புகார் அளிக்கப்பட்ட வேளையில், அந்த சீனப் பிரஜைகள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இனி அவர்கள் மலேசியாவுக்குள் நுழைய முடியாதவாறு கருப்புப் பட்டியலில் இடப்பட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker