Latestமலேசியா

பேரரசர் புகைப்படம் எடுக்கக் கேட்டுக் கொண்டார் – பேரரசியார்

கோலாலம்பூர், செப். 3 – தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது, பேரரசர் நிகழ்ச்சிகளைப் புகைப்படம் எடுக்க பணித்ததாகப் பேரரசியார் துங்கு ஹாஜா அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தார் தெரிவித்துள்ளார்.

தேசிய தினத்தின்போது அவர் தமது கைப்பேசியின் வழியாக நிகழ்ச்சிகளைப் புகைப்படம் எடுத்ததை ஃபினலானா எனும் டுவிட்டர் கணக்கை வைத்திருக்கும் நபர் அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.

ஓர் அரசியார் போல அமர்ந்து நடக்கும் நிகழ்சிகளைப் கவனிப்பதை விடுத்து புகைப்படம் பிடித்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஃபின்லானாவுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட துங்கு அஸிஸா அமினா மைமுனா, பேரரசர் கேட்டுக் கொண்டதால்தான் அவ்வாறு செய்ததாகத் தமது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் குறிப்பை 6,200 பேர் விரும்புவதாகக் குறிப்பிட்ட வேளையில் அந்தச் செய்தி 4,200 முறை திரும்பவும் டுவிட்டர் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, அவரின் செய்கையை பலரும் பாராட்டியதோடு, அவர் இயல்பாக நடந்து கொள்வதைப் பெரும்பாலோர் விரும்புவதாகவும் அதனை மக்கள் பெரிது படுத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker