Latestமலேசியா

இந்துக்களை இழிவுப்படுத்திய விவகாரம்; ஸம்ரி விநோட் மீது சட்ட நடவடிக்கை இல்லை – AGC

புத்ராஜெயா,செப் 6 – சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸம்ரி விநோட் இந்துக்களை இழிவுப்படுத்தி பேசிய வீடியோ தொடர்பில் அவர் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என சட்டத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் இனிமேல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்றும் அது இந்து ஆகம அணிக்கு வழங்கிய கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கிறது.

அரசு தரப்பு வழக்கறிஞர் Mohamad Hanafiah Zakariaவால் கடந்த ஜூலை 5ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட அந்தக் கடிதம் நேற்றுதான் வழங்கப்பட்டிருந்தது. இக்கடிதத்தின் நகல் ஒன்றும் இந்து ஆகம அணியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கடிதத்தை தாமதமாக வழங்குவதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளப்பட்டதோடு, இவ்விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட முழு விசாரணைக்குப் பிறகு சட்டத்துறை தலைவரிடம் இருந்து கிடைத்த பதில் இதுதான் எனவும் மேல் விவரங்கள் எதுவும் தாம் வழங்க அதிகாரம் இல்லை எனவும் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தின் தொடர்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையில், அந்த காணொளியில் வெளிப்படையாகவே ஸம்ரி விநோட் இந்துக்களை இழிவாக பேசியுள்ளார். அதனால்தான் ஆயிரக்கணக்கான இந்துக்கள் போலிஸ் புகார் வழங்கினர். இந்த ஆதாரம் போதவில்லையா? எங்களுக்கு கிடைத்த பதில் இதுதானா? சட்டத்துறை தலைவரின் இந்த முடிவு வருத்தமளிப்பதோடு அவமானப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என இந்து ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அதுவே இது போன்ற ஒரு இழிவான பேச்சை இஸ்லாத்தைப் பற்றியோ அல்லது மலாய்காரர்கள் பற்றியோ யாராவது பேசியிருந்தால் முடிவு வேறுமாதிரியாக இருந்திருக்கும். அண்மையில் அங்காடி உணவுக்கடை நடத்துனர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படவில்லையா?

இந்த முடிவை எடுப்பதற்கு முன்பதாக இந்து அமைப்புகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா எனவும் அருண் கேட்டுள்ளார்.

ஸம்ரி விநோட் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இதற்கு முன்பு அனுப்பிய கடிதத்திற்கு சட்டத்துறை தலைவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததை தொடர்ந்து கடந்த வாரம் இரண்டாவது கடிதம் வழங்கப்பட்டது என்றும் தற்போது இந்த பதில் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker