Latestமலேசியா

குடும்ப உறுப்பினர்களின் எண்களை எழுதி வைத்துவிட்டு பினாங்கி பாலத்திலிருந்து குதித்து ஆடவர் தற்கொலை.

ஜோர்ஜ்டவுன், செப் 6 – 54 வயது மதிக்கத்தக்க ஓர் ஆடவன் பினாங்கு பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் நிகழ்ந்தது.
தற்கொலை செய்துக்கொண்ட 54 வயது, ஹாசாம் ஹஷிம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் சுங்கை பட்டாணி சிறைச்சாலையில் வேலை செய்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.
4 பிள்ளைகளுக்கு தந்தையான ஹாசாம் ஹஷிம் தனது காரை பினாங்கு பாலத்தின் 5.4வது கிலோ மீட்டரில் பார்க் செய்துவிட்டு, தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் தொலைப்பேசி எண்களையும் எழுதி வைத்தப் பின்னர் இந்த தற்கொலையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அவர் சுங்கை பட்டாணி மருத்துவமனையில் இன்சோம்னியா மற்றும் வயிற்று வலிக்காக சிகிச்சைப் பெற்றுள்ளார் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஹாசானின் உடல் சுங்கை பட்டாணி சிறைச்சாலை அதிகாரிகள் அடையாளம் காட்டினர். பிரத பரிசோதனைக்காக அவரின் உடல் பினாங்கு மருத்துவனையின் பிரேத பரிசோதனை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker