Latestவாழ்க்கை

ரனு மண்டல் உயர்வுக்குப் பின் தானே தேடி வரும் உறவு!

கொல்கத்தா,செப்-6- என் அம்மா ரயில்களில் பாடிக்கொண்டிருந்தது குறித்து எனக்குத் தெரியாது – நெட்டிசன்களின் கிண்டலுக்கு ரனு மண்டலின் மகள் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் கொல்கத்தா ரனகாட் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் ரனு மண்டல் என்ற ஆதரவற்ற பெண் பிரபல இந்திப் பாடகியான லதா மங்கேஷ்கரின் ‘ஏக் பயார் கா நக்மா ஹா’ என்ற பாடலைப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதன் மூலம் ரானு சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்தார். அவர் பாலிவுட்டில் பாட வேண்டும் என்று பலரும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ரனு பாலிவுட்டில் பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் விருந்தினராகவும் கலந்து கொண்டார்.

ரனுவுக்கு இந்திப் படம் ஒன்றில் பாடும் வாய்ப்பை பிரபல இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா வழங்கினார். அது தொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதன் பிறகு தொடர் வாய்ப்புகள் ரானு மண்டாலைத் தேடி வரத்தொடங்கின. இந்நிலையில் இத்தனை நாட்களும் அவருடன் தொடர்பில் இல்லாமல் இருந்த அவரது மகள் எலிசபெத் சதி ராய் என்பவரும் அவரைத் தேடி வந்தார். ரானு மண்டாலுடன் அவர் கட்டியணைத்தபடி இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதே நேரத்தில் தன்னுடைய தாய் ஆதரவற்ற நிலையில் இருந்தபோது கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு இப்போது அவர் பிரபலமானதும் தேடிவரக் காரணம் என்ன என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எலிசபெத் சதி ராய் கூறியுள்ளதாவது:

“என்னுடைய அம்மா ரயில்களில் பாடிக்கொண்டிருந்தது குறித்து எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் அவரை எப்போதாவது தான் சந்திப்பேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் கொல்கத்தாவின் தர்மத்தாலா நகருக்குச் சென்ற போது அங்குள்ள பேருந்து நிலையத்தில் அவர் அமர்ந்திருந்தார். அவரிடம் 200 ரூபாயைக் கொடுத்து வீட்டுக்குப் போகுமாறு கூறினேன். என் மாமா ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு 500 ரூபாய் அனுப்பி வந்தேன்.

நான் விவாகரத்தானவள். ஒரு சிறிய மளிகைக் கடை வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கும் சொந்தப் பிரச்சினைகள் உள்ளன. ஆனால், என்னால் முடிந்த அளவுக்கு அம்மாவைக் கவனித்து வந்தேன். பலமுறை அவரை என்னோடு வந்துவிடுமாறு கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இப்போது மக்கள் என் மீது பழி போடுகின்றனர். நான் யாரிடம் சென்று முறையிடுவது?


என் தாயைக் கவனித்து வரும் அம்ரா ஷோபாய் ஷோய்த்தான் கிளப் உறுப்பினர்கள் என் அம்மாவோடு போனில் கூட நான் பேசக்கூடாது. மீறினால் காலை உடைத்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர். எனக்கு எதிராக என் அம்மாவைத் தூண்டி விடுகின்றனர். எனக்கு உதவ யாருமில்லை. அவர்கள் என் அம்மாவின் கணக்கிலிருந்து 10,000 ரூபாய் எடுத்துள்ளனர். ஆனால் அம்மாவுக்கு ஒரு சூட்கேஸும், இரண்டு நைட்டிகளுமே வாங்கிக் கொடுத்துள்ளனர். நான் அவர்களை நம்பமாட்டேன்’’.இவ்வாறு எலிசபெத் சதி ராய் கூறியுள்ளார்

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker