Latestமலேசியா

அரசின் தோல்வியடைந்த கொள்கைகள் – மறுபரிசீலனை வேண்டும்

கோலாலம்பூர், செப். 8 – அரசின் தோல்வியடைந்த கொள்கைகள் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென பிகே ஆரின் தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

புதிய பொருளாதாரக் கொள்கை மலாய்க்காரர்களின் வறுமையைக் குறைக்க கொண்டு வரப்பட்டது. ஆனால், இன்னமும் மலாய்க்காரர்களிடையே வறுமை நிலை அப்படியே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அடிப்படை காரணங்களை முழுமையாக ஆராயாமல் கொள்கைக்கான திட்டங்கள் செயல் படுத்தப்படுவதால், அவை தோல்வியடைவதாகக் குறிப்பிட்ட அவர், அரசும் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

நாட்டில் வறுமை நிலை நிலவுதவதை ஒப்புக் கொண்ட அவர் கம்பங்களில் இருக்கும் மலாய்க்காரர்கள், முன்னாள் தோட்டத் தொழிலாளார்களான இந்தியர்கள், சீன மீனவர்கள், பூர்வீகக் குடியினர் ஆகியோர் வறுமையில் வாடுவதாகச் சுட்டிக்காட்டினார்.

எனவே, அரசின் கொள்கைகள் இனம் சாராமல் தேவைக்கு ஏற்ப அமைய வேண்டுமென கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் 90ஆம் ஆண்டு விருந்துபசரிப்பில் நேற்று கலந்து கொண்டபோது அவ்வாறு அறிவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker