Latestஇந்தியா

இந்தியாவின் சந்திராயன் விண்கலத்துடனான தொடர்பு – துண்டிப்பு

புளோரிடா, செப். 8 –
பெங்களூரு, செப். 8 – இந்தியா நிலாவுக்கு அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம் பூமியில் இருக்கும் அதன் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த விண்கலம் சந்திரனின் தென்பகுதியில் இறங்கி ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. உள்ளூர் நேரப்படி 2007 மணியளவில் தரையிறங்குவதற்கு சில நிமிட நேரமே இருந்த சமயத்தில், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ எனப்படும் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் கே.சிவன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

விக்ரம் எனப் பெயரிடப்பட்ட் அதன் விண்கலம் இயல்பாக இயங்கியதாகவும் அதன் செயல்பாட்டைக் கட்டுப்பாட்டு மையம் கண்காணித்து வந்த வேளயில் அதன் தொடர்பு விட்டுப்போனது

கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் பதை பதைப்போடு தொடர்பை நிலைநிறுத்த போராட்டைத்தை நடத்தினர்.

அது பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், திட்டத்தில் வெற்றியும் தோல்வியும் உண்டு. இது இந்தியாவின் இமாலய வெற்றி என்றும் குறிப்பிட்டார். சிவன் கூறும்போது, கடைசி 15 நிமிடங்கள் வாழ்வா சாவா எனும் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்ததாகக் தெரிவித்தார். சந்திரனின் ஈர்ப்புச் சக்தி, அங்குள்ள பள்ளத்தாக்குகள் மற்றும் தூசு மண்டலம் முதலியவை பெரும் சவாலாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

சந்திரனின் தென் பகுதியில் தண்ணீர் ஐஸ் கட்டி வடிவில் இருப்பதாக 2008இல் கண்டறியப்பட்டது. அந்தத் தென் பகுதியில் எந்த நாடும் தனது விண்கலத்தை இறக்கி ஆய்வில் இறங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது வரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீன விண்கலன்களே சந்திரனில் தரையிறக்கிய நாடுகளாகும். ஏப்ரல் மாதத்தில் இஸ்ரேலின் விண்கலம் சந்திரனின் தரையிறங்க முடியாமல் தோல்வி அடைந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker