Latestஇந்தியா

டுவிட்டர் கணக்கில் கமல் 14 லட்சம் :- ரஜினி 1.4 லட்சம்!

சென்னை : செப்.8 ‘டுவிட்டர், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில், போலி கணக்குகளை நீக்க, ரஜினி, கமல் அணியினர் திட்டமிட்டு உள்ளனர்.

நடிகர் ரஜினி, 2017 இறுதியில், அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தார். லோக்சபா தேர்தலில் ஒதுங்கியிருந்த ரஜினி, வரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக கூறியுள்ளார்.

ஆனால், அதற்கான பணிகளை, ரஜினி இன்னும் ஆரம்பிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை மட்டும் துவக்கி, உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். நிர்வாகிகள் உதவியுடன், மக்கள் நலப் பணிகளை செய்து வரும் ரஜினி, சினிமாவில் தான் ‘பிசி’யாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இளைய தலைமுறையை கவரவும், குறுகிய காலத்தில், மக்கள் மத்தியில் ஆதரவை பெறவுவும், சமூக வலைதள பிரசாரத்தை, ரஜினி அதிகம் நம்பியுள்ளார். ஆரம்பத்தில், சுறுசுறுப்பாக இருந்த இப்பிரசாரம், தற்போது தொய்வடைந்து விட்டது.

ரஜினியின் அறிவிப்புக்கு பின், கட்சி ஆரம்பித்த, நடிகர் கமல், சூட்டோடு சூட்டாக, லோக்சபா தேர்தலில் கட்சியை களமிறக்கினார். தற்போது, கமல் கட்சியின், ‘டுவிட்டர்’ பக்கத்தை, 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர்
பின்தொடர்கின்றனர்.

ஆனால், ரஜினி மன்றத்தின், ‘டுவிட்டர்’ பக்கத்தை 1.4 லட்சம் பேர் மட்டுமே பின்தொடர்கின்றனர். ரஜினி மற்றும் அவரது மன்றத்தின் பெயரில், ஏராளமான போலி சமூக வலைதள கணக்குகள் உள்ளதால், அவற்றை நீக்க, நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்டத்திற்கு, ஓர் அதிகாரப்பூர்வ, ‘டுவிட்டர்’ கணக்கை மட்டும் நிர்வகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker