Latestமலேசியா

முஸ்லிம் அல்லாதோரின் பொருள்கள் புறக்கணிப்பு – அரசு மெத்தனம்

கோலாலம்பூர், செப். 8 – முஸ்லிம் அல்லாதோரின் பொருள்களைப் புறக்கணிக்கும் செயலைத் தடுக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாக பேட்ரியோட்டின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல்(ஓய்வு) முகமட் அர்ஷாட் ராஜி குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புறக்கணிப்பை முஸ்லிம்களின் பொருள்களைச் சந்தைப் படுத்து வதற்காகத் தொடங்கப்பட்டது. இது அறிவுக்கு ஒத்துவராது, பிரச்சினையைக் கொடுக்கக்கூடியது, காராணமில்லாதது, முட்டாள் தனமானது, நாட்டின் பொருளாதாரத்துக்கு இடையூறானது என அவர் விமர்சித்துள்ளார்.

அதனைத் தடுக்க பக்காத்தான் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

பொருள்களை யார் உற்பத்தி செய்தாலும், வருமானத்தை முதலீட்டில் செலுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடக்கியவர்கள் இன, சமய ரீதியான உணர்வுகளைத் தூண்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் வறுமை நிலை 16 லிருந்து 20 விழுக்காடு இருக்கிறது, சம்பளம் குறைந்து வருகிறது, ரிங்கிட்டின் மதிப்பு குறைந்து வருவது போன்ற விவகாரங்களில் கவனத்தைச் செலுத்துவதை விடுத்து, முஸ்லிம் அல்லாதோரின் பொருள்களைப் புறக்கணிப்பு செய்வது மடமைத்தனம் என அவர் சாடினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker