Latestவாழ்க்கை

1000 குழந்தைகளுக்கு இதயம் கொடுத்த மகேஷ் பாபு!

ஐதராபாத், செப்.8- சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர்கள். சிலர் செய்யும் உதவி வெளியில் தெரியும், சிலர் செய்யும் உதவி வெளியில் தெரியாது.

தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு கடந்த மூன்றரை வருடங்களில் சுமார் 1000 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ள செய்தி தற்போது டோலிவுட்டில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

இதற்காக அவரது மனைவி நம்ரதா, தனி கவனம் செலுத்தி வருவதாகச் சொல்கிறார்கள். மகேஷ் பாபு, நம்ரதாவின் மகன் பிறந்த போது பல்வேறு பிரச்சினைகளுடன்தான் பிறந்தாராம். அவரை மருத்துவர்கள் மிகவும் கவனமாக கவனித்து சிகிச்சை அளித்தார்களாம்.

அதிலிருந்துதான் பலருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் மகேஷ் பாபுவுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் தலா ஒரு கிராமத்தை மகேஷ் பாபு தத்தெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker