Videosமலேசியா

கடுமையான புகைமூட்டம்; சரவாக்கில் 8 மாவட்ட பள்ளிகள்  மூடப்படுகின்றன.


சரவாக், செப் 10 – கடுமையான புகைமூட்டத்தினால் சரவாக்கில் 8 மாவட்டங்களில் பள்ளிகள்  மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணிவரை காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சரவாக்கில் உள்ள 8 மாவட்டங்களான கூச்சிங், சமராஹான், படவான், செரியான், ஶ்ரீஅமான், பெத்தோங், பாவ், மற்றும் லுன்டுவில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாக சரவாக் மாநில கல்வி துணை இயக்குநர் மாட் அலி அபாங் மஸாகுஸ் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு நடைப்பெற்று கொண்டிருக்கும் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு வழக்கம் போல் நடைப்பெறும் என்றும் அவர் கூறினார்.
அதோடு, காலை வேளையில் மாநில கல்வி இலாகாவிடம் மீண்டும் சுமார் 50000 முக கவசங்கள் வழங்கப்பட்டதாக  என்று சரவாக் மாநில பொது தற்காப்பு அமைப்பு தெரிவித்தது. இந்த முக கவசங்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker