Latestமலேசியா

கும்பலின் கொள்ளை: இரு அமலாக்க அதிகாரிகள் உட்பட எழுவர் கைது

கோலாலம்பூர், செப். 10 – இந்தோனேசிய வர்த்தகரிடமிருந்து கொள்ளைடித்த சந்தேகத்தின் பேரில் இரு அமலாக்க அதிகாரிகள் உட்பட எழுவர் கைது செய்யபட்டுள்ளனர்.

தலைநகரில் உள்ள அடுக்குமாடி வீட்டில் செப்டம்பர் 9இல் நடந்த கொள்ளையில் 413,000 சிங்கப்பூர் டாலரை(ரிம. 1.24 மில்லியன்) கொள்ளையிட்ட தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பாஹ்மி விஸ்நாதன் தெரிவித்தார்.

40 வயதான இந்தோனேசிய வர்த்தகர் சிங்கப்பூர்காரர், மலேசியர் ஒருவரோடு கலந்தாலோசிக்க அவர் வந்ததாகத் தெரிகிறது.

அவர் மலேசியரோடு உணவகத்துக்குச் சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது, நான்கு பேர் அங்கு வந்து விசாரணை செய்வதாகக் கூறி பணப்பையை அபகரித்துச் சென்றதாக அவர் புகார் கொடுத்திருந்தார். வந்த நால்வரில் இருவர் அமலாக்க அதிகாரிகள் என தெரிகிறது.

போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் அனைவரும் செப்டம்பர் 5, 7ஆம் தேதிகளில் கைது செய்யப்பட்டதாக முகமட் பாஹ்மி தெரிவித்தார். அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker