Latestமலேசியா

சீனப் பிரஜைகளுக்கு மை கார்ட் விநியோகமா? விசாரணை தொடங்கியது

பெட்டாலிங் ஜெயா, செப். 10 – சீனப் பிரஜைக ளுக்கு தேசிய பதிவிலாகா மை கார்டுகளை விநியோகம் செய்வதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து போலீசார் விசாரணையைத் தொடக்கி இருப்பதாக அறிவித்துள்ளது.

அண்மையில் 5 சீன நாட்டவர்கள் மை கார்டுகளைக் காட்டும் புகைப்படம் வெளியிடப்பட்டதை அடுத்து, அது போலியான மைகார்டுகள் என்றும் அவை போலி ஏஜென்டுகளால் வெளியிடப் பட்டிருப்பதாகத் தேசிய பதிவிலாகா தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

மேலும், சீன மாது ஒருவர் மைகார்டைக் காட்டும் புகைப்படத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், அந்த மாது உள்ளூர்காரை திருமணம் செய்து கொண்டு இருபது ஆண்டுகளுக்கு மேல் இங்கு குடியிருந்து வருவதோடு, குடியுரிமை பெறுவதற்கு தகுதியைக் கொண்டிருப்பதால் அவருக்கு குடியுரிமையும் கடப்பிதழும் வழங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு விதிகளுக்கு இணங்க மிகுந்த கட்டுப்பாடுகளோடு குடியுரிமைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் ஊழல் எதுவும் இல்லையென அவர் தெரிவித்தார்.

தேசிய பதிவிலாகாவின் மீது பொய்யான தகவல் பல காலமாக பரப்பப்பட்டு களங்கம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், பொய்யான செய்திகளைப் பரப்புவோரை அடையாளம் காண போலீசாரும் தகவல், பல்லூடக ஆணையமும் இணைந்து விசாரணையை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அம்மதிரியான செய்திகளை வெளியிடுவோர் அதில் உண்மை இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிட வேண்டுமென ருஸ்லின் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker