Latestமலேசியா

ஜீப்பிலிருந்து விழுந்த குழந்தை, அதிருஷ்டவசமாக உயிர் தப்பியது

இடுக்கி, செப். 10 – கேராளா இடுக்கியில் இருந்து பழனி மலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளையில் ஜீப்பிலிருந்து விழுந்த குழந்தை தெய்வாதீனமாக உயிர் பிழைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பழனியில் இருந்து திரும்பும்போது தூக்கத்தில் இருந்த தாயாரின் மடியில் இருந்த குழந்தை, இரவு 9.30 மணியளவில் ஜீப்பிலிருந்து நழுவி விழுந்துள்ளது. அதனை அறியாமல் அவர்கள் 40 கிலோ மீட்டரில் உள்ள முல்லார்குடியில் உள்ள சொந்த ஊருக்குச் சென்ற பின்னர், குழந்தை காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாருக்குப் புகார் கொடுகப்பட்டது. முன்னாரில் உள்ள செக்போய்ன்டில் குழந்தை இருப்பதாகவும் அதற்கு நெற்றியில் காயம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிசிடிவியின் பதிவில், ஜீப்பிலிருந்து விழுந்த ஒரு வயது குழந்தை, ஒளி தெரியும் இடத்தைக் நோக்கி ஊர்ந்து சென்றிருக்கிறது.

குழந்தையைப் பற்றி தகவல் அறிந்த போலீஸ்காரர் ஆர்.லக்சுமி அங்குமிங்கும் தேடியபோது குழந்தை ஊர்ந்து வருவதைக் கண்டு அதனை கைப்பற்றி முதலுதவி கொடுத்த பின்னர் குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

குழந்தை ஊர்ந்து வந்த பாதைக்கு நேர் எதிரான பாதையில் காட்டு விலங்குகள் அடிக்கடி போய் வந்திருப்பதாகவும், அந்தப் பாதையில் குழந்தை சென்றிருந்தால் இந்நேரம் விலங்குகளுக்கு அது இரையாகி இருக்கும் அதிர்ச்சியான தகவல் சொல்லப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker